பொங்கல் வாழ்த்து Happy Thaipongal

புதிய வாய்ப்புகளுக்கு வழி பிறக்கும்! – என்றி லாய்யின் பொங்கல் வாழ்த்து

Source: Anegun
http://www.anegun.com/?p=56972
🍯🍯🍯

கோலாலம்பூர், ஜன.15 –
ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் மக்களின் நல்வாழ்வுக்காகப் புதிய வாய்ப்புகளுக்கு வழி பிறக்கும் ஒரு திருநாளாக பொங்கல் விழா அமைந்திருக்கும் என்று கூட்டரசு பிரதேச கெஅடிலான் உதவி தலைவர் என்றி லாய் தெரிவித்தார்.

கொண்டாட்டங்கள் நிறைந்த ஒரு மாதம் ஜனவரி. அவ்வகையில் தை முதல் தேதி கொண்டாற்ர்டப்படும் தைப்பொங்கலை உலக முழுமையும் உள்ள தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

நல்ல அறுவடையை வழங்கும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு திருநாளாக அனுசரிக்கப்படும் இந்நாள் தமிழ்நாட்டில் காலங்காலமாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே வேளையில், இத்திருநாளின் சிறப்புகள் குன்றாத வகையில் நமது நாட்டிலும் மக்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

” தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பதற்கொப்ப இந்தத் தைப்பொங்கல் அனைவருக்கும் புதிய வாய்ப்புகளைத் தேடித் தரும் ஒரு திருநாளாக மலரட்டும் என்று தனது பொங்கல்- தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

2023 பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் கீழ் மலேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் முதலாவது ஆண்டைக் குறிக்கிறது. புதிய தொடக்கத்திற்குப் பல்வேறு சவால்கள் மற்றும் சோதனைகளைக் கடக்க வேண்டும்.

அமைதி, சுபிட்சம் மற்றும் முன்னேற்றம் நிறைந்த மலேசியாவை மீண்டும் உருவாக்குவதில் ‘மறுமலர்ச்சி கொள்கை’ பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

தைப்பொங்கலுக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர் சீனர்கள் சீனப்புத்தாண்டைக் கொண்டாடுவர். பல்லின மக்கள் வாழும் நாட்டில் அனைத்து பெருநாட்களும் ஒற்றுமையாகக் கொண்டாடுவது தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஒற்றுமை உணர்வோடு 2023 ஆம் ஆண்டை “அனைவருக்கும் நீதி” எனும் கருப்பொருளோடு கொண்டாடுவோம் என்று கெஅடிலான் வாங்சா மாஜு தொகுதி தலைவருமான என்றி லாய் வலியுறுத்தினார்.