ஒத்துழைப்பையும்,சகிப்புத்தன்மையையும் பேணிக் காப்போம்-என்றி லாய்

ஒத்துழைப்பையும், சகிப்புத்தன்மையையும் பேணிக் காப்போம்-என்றி லாய்

Source: Anegun Tamil

ஒத்துழைப்பையும், சகிப்புத்தன்மையையும் பேணிக் காப்போம்-என்றி லாய்

Home சமூகம்
சமூகம்மலேசியா
ஒத்துழைப்பையும், சகிப்புத்தன்மையையும் பேணிக் காப்போம்-என்றி லாய்
By தா.சரளா தேவி -November 9, 202321

கோலாலம்பூர், நவ.9-

உலகில் கொண்டாடப்படும் மிகப் பெரிய பெருநாள்களில் தீபாவளித் திருநாளும் ஒன்றாகும். இந்தியாவிலுள்ள 120 கோடி மக்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தீப ஒளி எனப்படும் இத்திருநாளைக் கொண்டாடுகின்றனர் என்று கெஅடிலான் வாங்சா மாஜூ தொகுதி தலைவர், என்றீ லாய் தெரிவித்தார்.

நம் நாட்டில் குறிப்பிடத்தக்க ஒரு பெருநாளாக இந்த தீபாவளி இருப்பது மட்டுமின்றி இது மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. இவர்களின் வாழ்க்கைப் பின்னணி, பண்பாடு, நம்பிக்கை, பூர்வீகம் வெவ்வேறாக இருப்பது தொடர்பான வரலாற்றை நாம் கொண்டுள்ளோம்.

பொதுவான இலக்குகளை அடைய ஒருவருக்கொரிடையே மரியாதை, சகிப்புத்தன்மை, ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் அனைவரும் சேர்ந்து வாழ முடியும் என்பதை நாம் நிரூபித்திருக்கிறோம்.

தீபாவளி என்பது தீமையை வென்ற நன்மையைப் பற்றி எடுத்துரைக்கக்கூடிய ஒரு திருநாளாகும். இருந்த போதிலும் ஒரு தீமையை நன்மை வென்றது என்பது உலகம் இதுவரை அனுபவிக்காத ஓர் உண்மையாகும். அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என்று கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோசனை வாரியக் குழு உறுப்பினருமான என்றீ லாய் குறிப்பிட்டார்.